பிப்ரவரி மாத புகைப்படப்போட்டிக்கு
போட்டிப்படம் #1
சாலையில் தேங்கியிருக்கும் நீரில் பிரதிபலிக்கும் மரங்கள்.
போட்டிப்படம் #2
இது நிழல் அல்ல, ஏனெனில் அப்போது அங்கு வெயிலே இல்லை.
March மாத புகைப்படப்போட்டிக்கு
பதித்தவர்
இ.கா.வள்ளி
@
3
பின்னூட்டங்கள்
ஓசாமா, நித்ய கன்னி மற்றும் சில பெண்ணிய குறிப்புகள்
ஒரு பெண் குழந்தை தன்னை வித்யாசமாக, ஒரு பெண்ணாக உணர்கின்றாள் என்பது அவளின் சந்தோசத்தின் முடிவாக இருக்கும், அவளின் சில கனவுகளின் தொடக்கமாக இருக்கும், பல கனவுகளின் முடிவுகளாக இருக்கும். அவள் பெண்ணாக உணரும் எந்த சந்தர்ப்பமாக இருக்கட்டும் அதன் பின் அவள் நிச்சயமாக சில, பல இன்பங்களை இழக்க நேரிடும்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியில் பெண்கள் அனுபவிக்கும் துயரங்களைப்பற்றி மிக அழகாக, ஆழமாக மற்றும் வேதனையுடன் காட்சிபடுத்துகின்றது ஓசாமா படம். அதில் ஓசாமாவாக நடித்த பெண் குழந்தை தான் பெண் என்ற எல்லையைத் தொடங்கியவுடன் ஆரம்பிக்கும் அவளுக்கான துன்பங்கள் கொடியவை. அந்த படத்தைப்பற்றி இதை விட அழகாக எவரும் எழுதமுடியாது, இந்த சுட்டியில் பார்க்கவும்.
வலியைத் தந்தபடி நிறைவடையும் இந்த படத்தைப்பற்றி, அந்த பெண்ணைப்பற்றி ரொம்ப நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த படத்தில் அவளுக்கென பெரிய பூட்டாக அந்த கிழவன் எடுத்தபோது வேதனையாக இருந்தது, அந்த பெண்ணைப் போய் கூட்டிக்கொண்டு வந்து விடலாம் என்று கூடத்தோன்றும், அது போல் நிறைய பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்தபோது மிக்க வேதனையாய் இருந்தது. எந்த ஒரு கற்பழிப்பு காட்சியோ, அதிக அளவில் அருவெருக்கத்தக்க காட்சியோ அதில் இல்லை, ஆனால் எல்லோரையும் இளகிவிடச்செய்யும் அந்த படம் வேதனையைத எல்லா தரப்பினருக்கும் தரும், ஒரு ஸ்கிப்பிங் ஆட்டத்திலும், சிறைக்கம்பிகளிலும், பூட்டிலும், ஏணிப்படியிலும் மற்றும் மற்றும் கிழவன் குளிப்பதிலுமே அனைத்தும் காட்டப்பட்டுவிடும்...
நித்ய கன்னியைப்பற்றி இங்கே, இந்த கதையும் சிறு சோகத்தை தந்தபடி சட்டென நிறைவுற்றது. யாராவது அவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கத்தையும் தந்தது., "இத்தனை அழகை இந்த உலகம் தாங்காது" என்று விஸ்வாமித்திரர் கூறும் போதும், அவள் தர்மத்தின் படி நடந்தாலுமே அவளின் மீதான தவறான பார்வைகளும் நிறைய யோசிக்க வைத்தன. அவள் கடந்து வந்த 4 நபர்கள், இவர்களுக்குள் தான் ஆண் வர்க்கமே அடங்கிவிடுமோ என்றும் யோசித்தேன்.
முக்கியமானவன் தனக்காக அவளை பயன்படுத்திக்கொண்டன்., முதலானவன் அவளின் மனதை மதிக்காமல் உடலை மாத்திரமே மதித்தான், இரண்டாமவன் தர்மம் தர்மம் என்று அவளின் குறைகளை பிடித்துக்கொண்டான். மூன்றாமவன் அவளைக் கலையுடன், மரியாதையாகப் பார்த்தான்., இந்த கதை நிறைவடைந்த வகையில் பார்த்தால் பெண்ணை அப்படி மதிப்பவன் இறக்கத்தான் வேண்டுமோ என்று தோன்றியது எனக்கு. எல்லா பக்கங்களிலிருந்தும் அவளைத் துரத்தும் ஆணியவாத மதம், கடைசியில் அவளை பைத்தியமாக்கிவிடும்.
இப்படியும் பெண்ணியம் பேசலாமோ என்று யோசிக்க வைத்தது இவை இரண்டும்., இந்து மதம் மற்றும் இஸ்லாம் மதம் இரண்டையும் தொட்டுள்ள இந்த இரண்டிலும் எந்த ஒரு அறுவெருக்கத்தக்க காட்சிகளோ அல்லது வார்த்தைகளோ இல்லை, ஆனால் எந்த ஆணையும் இளக வைக்கும் கருத்துக்கள் கொண்ட படம் மற்றும் கதை.
யோசித்துப்பார்த்தால் அது தான் சாத்வீகமான வழி, என் நடவடிக்கைகளைப்பார்த்து இரண்டு தாய்கள் (குறைந்த பட்சம்) தன் பெண் குழந்தைகளை படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப முடிவு செய்ய வேண்டும் என்று யோசிப்பேன்., அக்கா மாதிரி நீயும் வேலைக்கு போகனும் என்று கூற வேண்டும், அவர்களுக்கு பெண்ணியம் தெரியாது, புரட்சிகள் தெரியாது, எளியவர்கள், அவர்களிடம் போய் இது தான் பெண்ணியம் இப்படியெல்லாம் பேசித்தான் தான் என் சுதந்திரத்தைக்காட்டுவேன் என்றால், நிச்சயமாக அது எந்த ஒரு நன்மையும் விளைவிக்காது. என்னைப்பார்த்து அவர்கள் பெண்களைப்படிக்க வைக்க மாட்டார்கள்.
பெண்ணாக என்னை அடிமைப்படுத்திக் கேவலப்படுத்த நீயார், சுதந்திரம் என்ற பெயரில் என்னையும், என் இனத்தையும் நானே கேவலப்படுத்திக்கொள்வேன் என்று ஆகக்கூடாது. நான் அனுபவித்தேன், யோசித்தேன், தேடினேன், சிலவையெல்லாம் கண்டுகொண்டேன், அவற்றிலிருந்து மீண்டேன் சரி அதனால் என்ன? அதனுடன் நிருத்த முயலாமல் சமூகத்திற்கு உணர்த்துகின்றேன், சரி எதாவது நன்மை? எங்காவது பதில் கிடைக்கவேண்டும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதம் அது அமைய வேண்டும். அதை நொக்கி ஏதேனும் அடியெடுக்க வேண்டும், உபயோகமாக ஏதேனும் செய்யவேண்டும், ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும்.
சுஜாதா கூறுவது போல் அதி புத்திசாலிகள் மிகவும் குறைந்த பட்சமே, அவர்கள் நிச்சயம் யோசிக்கத்தெரிந்தவர்கள். அவர்களிடம் நம்மை நிரூபிப்பதில் இல்லை பெண்ணியமோ அல்லது எனக்கு எது சரியெனப்படிகின்றதோ அதுவும். அவர்களிடம் நாம் நிரூபிக்கக்கூடிய சில விசயங்கள் இருக்கின்றன, அவற்றை நோக்கி நாம் வேரு வகையில் பயணிக்கலாம், உதாரணமாக தொழில்நுட்ப அறிவு, இலக்கிய அறிவு, விளையாட்டு மற்றும் அரசியல். பயனுள்ள வகையில் செல்லாமல், தேவையான இடத்தில் செய்யாமலும், தேவையற்ற இடத்தில் வீணாக செய்வதிலும் நான் எதையும் சாதிக்கப்போவதில்லை. எந்த ஒரு செயலும் தீர்வு சார்ந்ததாய் இருக்கவேண்டுமே ஒழிய, பிரச்சனையை இன்னும் ஆழப்படுத்தும் பிரச்சனை சார்ந்ததாக இருந்துவிடக்கூடாது.
அந்த படமும் ஆகட்டும், கதையும் ஆகட்டும் எந்த ஒன்றையும் கருத்துக்களுடனோ, புள்ளி விபரங்களுடனோ உணர்த்தவில்லை, எதையும் நம் மீது திணிக்கவில்லை. ஆனால் இவை இரண்டின் முடிவிலும் சரி நாம் பலத்த சோகத்திற்கு உள்ளாவோம், ஒரு ஆணாக இருந்தால் கூட. இந்த படம் பார்த்தவுடன், இந்த கதை படித்தேன், அதன் பின் நீண்டநாட்களாக நான் எதையும் எழுதவில்லை, எழுத தோணவே இல்லை. ஆனால் அத்தனை அழகாக பெண்ணிய கருத்துகளைக்கொண்ட படங்களும் இருக்கின்றன, புத்தகங்களும் இருக்கின்றன, அப்படி சாத்வீகமான வழிகளும் இருக்கின்றன என்பதை ஆச்சரியமாக உணர, இன்றைய தமிழ்மணத்தின் நிலை காரணமாகிவிட்டது.
பதித்தவர்
இ.கா.வள்ளி
@
2
பின்னூட்டங்கள்


