பெண்ணியம் இல்லங்கோ.. பரவாலக என் ஆண் நண்பர்களும், அலுவலக நண்பர்களும், உறவினர்களும் இந்த கருத்தை முன்னிருத்துவார்கள்... அதான் நானும் அந்த துறையில் இருப்பதால் அதைப்பற்றி என் கண்ணோட்டம்,
நான் அறிந்த ஆண்கள் அனைவரும் ஆணியம் பேசினாலும் எனக்கு அனைத்து வகையிலும் உதவியாகவே தான் இருப்பார்கள்.. என்னை எந்த வகையிலும் கட்டுப்படுத்த மாட்டார்கள்.. தண்ணி தெளிச்சிவிட்டார்களா என்று தெரியவில்லை... ஆனாலும் அவர்கள் என்னை மிகவும் கிண்டல் செய்வார்கள்.. அவற்றை யோசித்தால் எனக்கு சில சமயம் கோபமாகவும் வரும், சில சமயம் சிரித்துவிட்டு விட்டுவிடுவேன்... இப்போ எழுத ஊடகம் இருப்பதால் எழுதுகிறேன்.
நான் முதுகலை கல்லூரி படித்த போது, பெண்கள் கல்லூரியில் படித்தேன்.. திறமையாக நிகழ்வு(புரோக்கிறாம்) எழுதும் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்... ஆனால் அது கலை அறிவியல் கல்லூரி.. தொழில் நுட்பக் கல்லூரிகளில் அறிவாளிப் பெண்கள் இருந்திருக்கலாம்.. ஆனால் மற்றவர்களின் பார்வை ஒன்றாகத்தான் இருந்திருக்குமென்று நினைக்கிறேன்...
விசயத்திற்கு வருகிறேன்... அந்த விரல் விட்டு எண்ணும் பெண்களில் பலர் திருச்சியை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்... வேலை எல்லாம் கனவுதான். நல்ல அறிவாளிப் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை, வாய்ப்பு கிடைப்பவர்கள் எல்லாம் அறிவாளிகலும் இல்லை.. பெரிய பின்னடைவு என்னெவென்றால் "ஆங்கிலம்".. ஆண்களை விட பெண்களே அங்கிலம் நன்றாக பேசுவதை கவனித்துள்ளேன்.. ஆனால் அவர்கள் புத்திசாலியாகவும் இருக்க மாட்டார்கள்.. அந்த ஆங்கிலத்திற்காகவே வேலையில் அமர்த்தும் நிறுவனங்களும் அதிகம்... அப்படிப்பட்ட நேரத்தில் திறமையான பெண்கள் வாய்ப்பை நலுவ விடுகிறார்கள்...
சரி, கெம்ப்பச்சில் வேலை தேடலாம் என்றால் அங்கு தான் விசயம் ஆரம்பிக்கின்றது.. நானும் ஒரு பெத்த கம்பெனியில் நேர்முகத்தில் கலந்து கொண்டேன்... நான் கவரும் அளவு அழகெல்லாம் இல்லை... தேர்ச்சி பெற்ற அனவரும் அ வையும் பி யயும் கூட்டி சி யில் போடக் கூட தெரியாதவர்கள்... அழகானவர்கள்... மதிப்பெண் அதிகம் 12த் தில்..
மிகவும் உடைந்து போனேன்.. நமக்கு கிடைக்கலையே.. கான்செப்ட் கூரும் முன் கோட் எழுதும் எனக்கு வந்த இயல்பான கோபம்., போங்கடா யாரை நம்பி நான் பிறந்தேன் என்று பெங்களூரில் வந்து இப்போது சேர்ந்திருக்கும் கம்பெனியில் கூட நல்ல பெயர். ஏன் சொல்ல வந்தேன்னா.. திறமை பார்த்து வேலைக்கு அமர்த்தினால் தான் வேலை பார்ப்பார்கள், அழகு பார்த்து அமர்த்தினால் அவர்கள் கொலு பொம்மையாகத் தான் இருப்பார்கள்... அது தானே லாஜிக்..
என் அம்மான் அவர்கள் மைக்குரோ சாப்ட்டில் வேலை பார்க்கிறார், அவர் சொல்லுவார் எங்க டீமில் 15 பேர், அதில் 2 பெண்கள்னா நாங்க 13 நாக தான் டீமை நினைப்போம் என்று... மைக்குரோ சாப்ட்டிலேயே இப்படியா..? அதுவும் அலுவலகத்தில் அழகு பெண்கள் இருப்பதை பலர் விரும்புகிறார்கள்.. திறமைக்கும் இடம் உண்டு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்..
பெரும்பாலான இடங்களில் திறமையை விட அழகும், ஆங்கிலமும், பந்தாவுமே எடுபடுகின்றன.. மனிதர்களுக்கு மற்றவர்களை கவனிக்கும் திறன் அல்லது கலை பொதுவாக குறைந்து வருகிறது.. அதனால் வெளி தோற்றத்திற்கு மதிப்பு கொடுத்து தவறான கண்ணொட்டத்தில் உள்ளவர்களை அதிகம் பார்க்கிறேன்.. ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல்.. அதனால் தேர்வு செய்யும் போது கோட்டை விடும் ஆண்கள் இருக்கும் வரை, கிண்டல் செய்யும் ஆண்களும் இருப்பார்கள்... கண்டுகொள்ளாமல் போவது தான் புத்திசாலித்தனம்..
நன்றாக வேலை செய்தால் ஈகோ பார்க்கும் ஆண் நண்பர்களும், பெண்களுடன் கண் பார்த்து பேசும் தைரியம் இல்லாமல் தரை பார்த்து பேசும் அலுவலக பெரிய தலைகளும், பெண்களைக் கவர கோட் எழுதி உதவி செய்யும் ஆண்களும் அலுவலகத்தில் அதிகம்.. அவர்களை நினைத்தால் எரிச்சல் தான் வரும்., அவர்களின் இந்த நடவடிக்கை மனதளவில் பாதிக்கும், பல முறை நாம் வேலை செய்வதைப் பற்றி கூட எங்களிடம் பேச தயங்கும் ஆண்களை நிறைய பார்க்கிறேன்.. (இத்தனைக்கும் நான் எளிமை மற்றும் பந்தா இல்லாத பார்ட்டி) அதனால் அவர்களின் அறிவை நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியாது.. ஆண்கள் அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் அளவு, பெண்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை அதை நான் நிறைய கண்டுள்ளேன்..
என்னை முதலில் வேலைக்கு அமர்த்திய சிறிய கம்பெனி முதலாளி, தான் பெண்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்றும் என்னை மட்டுமே அமர்த்துவதாகவும் கூறுவார்...(!!!!) நான் 11 மணி வரை கூட இருந்து சில முறை வேலைப் பார்ப்பேன்...( தேவைப்பட்டால்..) அதிக நேரம் வேலைப்பார்ப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை, ஆண்களாக இருந்தாலும், மென் துறையாக இருந்தாலும் 8 மணி நேரமே அதிகம் என்பதே என் கருத்து.. இரவு பூராக இருக்கும் ஆண்கள் தான் அதிகம் வேலை பார்க்கிறார்கள் என்றால் அது அபத்தம்... தேவையும் அற்றது...
அதனாலேயெ பெண் மென் துறை வல்லுனர்களுக்கு பொருப்பு இல்லை என்று கூறும் ஆண்களை நான் கண்டு கொள்வதே இல்லை., என்னால் 8 மணி நேரத்தில் எழுத முடியாததை 16 மணி நேரம் கொடுத்தாலும் எழுத முடியாது., இது என் கருத்து.. என் வழக்கம்.. இப்போது நான் வேலைப் பார்க்கும் அலுவலகத்தில் சப்போர்ட்டுக்காக வரும் மென் பொறியாளை கூட இதை வலியுருத்துவார்.. பெண்கள் ரொம்ப நேரம் இருக்காதிங்கம்மா என்று, சில ஆண் அலுவலக நண்பர்களும் கூறுவதுண்டு அவசியமில்லையென்று...(நான் இருப்பது)
அடடா எதை விடுவது, எதை எடுத்துக்கொள்வது, மொத்தத்தில் திறமையிருந்தால் மதிப்பார்கள், ஆனல் திறமைக்கு இடமும் கொடுக்க வேண்டும்.. எதைத் தேடுகிறோமோ அது தான் கிடைக்கும், அறிவைத் தேடினால் அறிவும், அழகைத் தேடினால் அழகும்... அழகானவர்கள் அறிவில்லாதவர்கள் என்றும் சொல்ல வரவில்லை... முக்கியத்துவம் என்றும் அறிவிற்கே கொடுக்கப்பட வேண்டும், அலுவலகத்திலாவது(.........!)
எளிதாகக் கிடைக்கும் பழங்கள், மரத்தடியிலேயே கிடக்கும், நல்ல பழங்களுக்கு மரத்தில் ஏறி துன்பப்படத்தான் வேண்டும்.. ஏற சோம்பேரித்தனம் பட்டுக் கொண்டு நல்ல பழங்களே இல்லை என்பது முட்டாள் தனம்... (எங்காவது நம்ப தலைப்பிற்கு பொருந்துகிறதா?)
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பானியா..?
பிரிவுகள்: பெண்ணியம்
Subscribe to:
Post Comments (Atom)



26 பின்னூட்டங்கள்:
ஓஹோ! இப்படியெல்லாம் நடக்குதா?
என்னவோ போங்க,உங்களை மதிப்பிடுபவர் மதிக்க தக்க வரையில் இருந்தால் பிரச்சனையில்லை,பலர் அப்படி இருப்பதில்லை என்பது தான் உண்மை.
பளிச்சின்னு சொல்லிட்டீங்க..என்னுடைய நன்பர்கள் (தேர்வு குழுவில் உள்ளவர்கள்..) சொல்லியது..பெங்களுருவில் கூட பெண்கள்..அழகை ஒரு சாதனமாக உபயோகிக்கின்றனர் என்று...வருத்தப்பட வேண்டிய சூழல்
திறமை எங்கிருந்தாலும்..வெளிப்படும்...
வள்ளி,
உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளீர்.
ஆணினத்தின் அடிப்படை அகங்காரமாக(நான்)
இருக்கலாம்.இப்போது புரிதலும்,சம மரியாதை
யும் கிடைக்கத்தொடங்கி உள்ளன.
இது வாழ்க்கை முழுவதற்குமான போராட்டம்
சகோதரி.வேலை செய்யும் இடத்தில் மட்டுமல்ல.,
வீட்டிலும் காணமுடியும்.
கோபத்தை கொட்டியதற்கு நன்றி.
உங்களது சொந்த அனுபவங்கள் கசப்பானவையாக இருந்திருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்து சம வாய்ப்புகள் என்று ஒரளவேனும் இருப்பது மென்பொருள் துறையில்தான். நீங்கள் கூறுவது போல் அழகு பார்த்தெல்லாம் யாரும் வேலை கொடுப்பதில்லை. நுட்பத்திறமையுடன் தொடர்பாடும் (communication) திறமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுண்டு. அந்த வகையில் ஆங்கிலத்தில் ஆளுமை, தன்னம்பிக்கை (பந்தா?) போன்ற குணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கலாம். சக ஆண்களிடம் உள்ள ஆற்றல்களைக் கற்க வேண்டுமென்றால் நீங்கள்தான் அவர்களை அணுகி, அதைக் கேட்க வேண்டும். அவர்களாகவே வந்து உங்கள் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பல்வேறு காரணங்களுக்காக, திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அவை திறமை போதாதவர்களுக்கு வழங்கப்படுவது நிறுவன அமைப்புகளில் சர்வ சாதாரணமான நிகழ்வுதான். ஆண்களுக்கும் இத்தகைய ஏமாற்றங்கள் நிகழ்வதுண்டு.
மேலை நாடுகளில் பெண்கள் கணக்குப் பாடங்களில் ஆர்வம் காட்டாததால், அவர்கள் கணினி மற்றும் பொறியியல் துறைகளில் பின்தங்கி விடுகிறார்கள் என்பது போல் கேள்விப்பட்டதுண்டு. அதை சரி செய்ய மாணவிகளுக்கு கணக்குப் பாடங்களில் ஆர்வமேற்படுத்தும் முயற்சிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நம் சூழலில் அத்தகைய பிரச்ச்சனைகள் எதையும் நான் உணர்ந்ததில்லை. மற்ற பாடங்களைப் போலவே கணக்கிலும் பெண்கள் நன்றாகவே தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதுதான் எனது புரிதல். அல்லது அது போன்ற காரணங்கள் இங்கும் உள்ளனவென்றால் அவற்றை சரி செய்ய வேண்டும்.
நன்றி வடுவூர் குமார்,TBCD ,முகு மற்றும் voice on wings...
voice on wings, நீங்கள் கூறுவதை நான் எங்கும் மறுக்கவில்லை.. ஆண்களுக்கு நிகராக திறமையைக் காட்ட, வாய்ப்புகள் அதிகம் இருப்பது மென் துறையில் தான் என்பது உண்மை... அப்படி திறமைப் பார்த்து எடுக்கும் பெண்களுக்கு திடீரென்று ஒன்றும் திறமை குன்றிவிடப் போவதில்லை.. பிறகு ஏன் ஆண்கள் அப்படிக் கூற வேண்டும்....? அது தான் என் தகவல்களின் புள்ளி..
நானும் மென் துறையில் தான் உள்ளேன் நானொன்றும் அழகில்லை, எனக்கும் தெரியும் அழகு பார்த்து எடுக்க மாட்டார்கள் என்று...(ம்ம்ம்ம்ம்)..! நாங்கள் நிச்சயம் (நான்...!) ஆண்களிடம் சந்தேகம் கேட்பேன், ஈகோவெல்லாம் இல்லை.. சில ஆண்கள் இருப்பார்கள் "கேட்டால் கூட சொல்லக் கூடாது என்று..." சிலர் பேசத் தயங்குவார்கள் அதைத் தான் கூறினேன்.. நான் சொன்னது சந்தேகம் கூட அல்ல, இயல்பான விசயங்களை அவர்கள் நண்பர்களாக பழகாததால் அறிய முடியாது என்றேன்..
பின்னூடம் இட்டமைக்கு நன்றி
பெண்ணை போகப்பொருளாக நினைக்கும் வரை இந்த பிரச்சனை இருக்கும்னு நினைக்கிறேன்!!
நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். விரைவில் முன்னேற வாழ்துக்கள்!!!
- நலம் விரும்பி
எழுதியதை ஒருமுறை படித்து பார்த்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் திருத்துனீங்கன்னா நல்லாருக்கும்...
அவுட் ஆப் காண்டக்ஸ்ட்டுக்கே கொண்டுபோயிருது சில பத்திகள்...:))
//என்னால் 8 மணி நேரத்தில் எழுத முடியாததை 16 மணி நேரம் கொடுத்தாலும் எழுத முடியாது., இது என் கருத்து..//
இப்பிடீல்லாம் பேசினா அவங்க உங்கள
என்னாதான் சொல்லமாட்டாங்க. இதுக்கு
நேரமெல்லாம் சொல்லிக்க முடியாதுங்க.
முயற்சி, முயற்சி, முயற்சிதான் முக்கியம்.
Oh Madam, can you pls let me know, where such IT companies are there?
Which IT company is giving such hefty salaries only for your beauty...
I've so many beautiful firends without job, so i cna ask them to apply!!!!
I'm also working in a s/w company, if i do not show performance or submit quality deliverables,
i'll be thrown out soon. I'm answerable for my work... Nobody cares about your physical appearance...
You will never be spared for giving buggy code, just because your 'beautiful'.....
I'e never seen any such discrimination in this industry...
In a team of 15, only 13 'really' work and other 2 just paid(equally) for their beauty...
do you think, 13 people are going to keep quiet for long time?????
கடைசி அனானி அவர்களே,
நீங்கள் கூறியிருப்பதற்கு நான் பதில் சொல்லிவிட்டேன் என்று நினைக்கின்றேன்... இருந்தாலும் திரும்பவும் கூறுகின்றேன்.. இது என் கருத்து இல்லை, அப்படிப்ப்ட்ட பெண்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அப்படித்தான் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பார்கள் என்பதே என் பதில்.. நான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஏன் இப்படி கூற வேண்டும்..?
அப்படி 15 பேரில், 13 றாக நினைப்பதை நான் ஆதரிக்கவில்லை, அப்படி ஒரு ஆள் இருந்தால் கூட, உடன் வேலை செய்பவர்கள் என்ன செய்ய முடியும்..? இவர் வேலை செய்யவில்லை என்றெல்லாம் கூறமுடியுமா என்ன..? சின்னபுள்ள தானமா இருக்குனு வடிவேலு மாதிரி மனதிலாவது சாட மாட்டார்கள்...? பிறகு ஏன் நான் அப்படிப்பட்ட கமெண்டுகளைக் கேட்க வேண்டும்...?
நானும் மென் துறையில் நல்ல சம்பளத்தில் தான் உள்ளேன்... எனக்கும் மென் துறை பற்றி நன்றாகவே தெரியும்.. பெரிய கம்பெனிகள் அட்களை கணக்கு காட்டி கிளயண்டுகளிடமிருந்து பணம் பார்ப்பதை தாங்கள் அறியவில்லையா..? பென்ச்சில் இருந்து கொண்டே 30,000 வரை, 6லிருட்ன்கு 10 மாதங்கள் கூட வாங்குவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா..?
மென் துறையில் பணம் பெரிய விசயம் இல்லை, அதனால் அப்படித் தான் எல்லா இடங்களிலும் நடக்கின்றது என்று நான் கூறவில்லை..! பல பெரிய கம்பெனிகளில் நடக்கின்றது தான்... இல்லை என்று மறுப்பது வாதத்திற்காக மட்டுமிருக்கலாம்.. அதுவும் நான் முக்கியமாக கூறியது கேம்பஷ் செலக்சன்... அதிலும் மதிப்பெண் அதிகமிருந்ததாக ஒப்புக் கொண்டேன்... என் வாதம் பெண்களைத் தாக்கியல்ல, புரிந்துகொள்ளுங்கள்... அதுவுமில்லாமல் அப்படி சேர்ந்த பெண்களை திரும்ப அனுப்பிய கதைகளும் உண்டு... செலக்ஷ்னில் கோளாரை வைத்துக் கொண்டு பெண்களை சாடாதீர்கள் என்பது தான் என் பதிவின் டிஷ்கி....
ரவி,
என் அலுவலகத்தில் பிளாகர் தடை செய்யப் பட்டுள்ளது, அனைத்து முறையும் கே-பிராக்சியில் திறப்பது கடினமாக உள்ளது.. இ-கலப்பையும் இல்லை, பொங்கு தமிழில் தட்டச்சி செய்து வெளியிடுகின்றேன்... ஆனால் திருத்திக் கொள்ள முயல்கின்றேன்..
இன்னொரு அனானி அவர்களே,
//இப்பிடீல்லாம் பேசினா அவங்க உங்கள
என்னாதான் சொல்லமாட்டாங்க. இதுக்கு
நேரமெல்லாம் சொல்லிக்க முடியாதுங்க.
முயற்சி, முயற்சி, முயற்சிதான் முக்கியம்.
//
முயற்சி செய்வது இல்லை மேட்டர், தெரியாமலில்லை.. செய்ய மனம் வருவதில்லை, 8 மணி நேரத்தை வீணாக்காமல், திறமையாக கையாண்டால் அதுவே போதும்.. என்பதே என் கருத்து...
Kadaisi Anony again...
First of all, this is one job where you have to show your continuous performance....
I agree with you that when an under qualified candidate is selected, performance will be poor.
This is applicable for any candidate and not only for 'beautiful' candidates!!!!
I think all companies will conduct so called technical/ analytical/ programmatic rounds of interviews.
Basically, you should be an expert in all...
Just because someone write 100 lines of code in 5 minutes, it doesn't mean that he/ she should be successful.
Whats the point in creating an excellent module and dont know to explain that...
So communication in English is a MUST.
Morevoer, nobody will go and complain to managers like school kids....
But i've seen project/module leaders rejecting under performing candidates....
Also, when there is a interdependent deliverable, issue will be raised when you dont stick to timelines...
For this, no need to go and complain ... they will be identified automatically.
In Campus, as far as i've seen...(have personally conducted so many interviews...)
12/ MCA/ BE marks are just one of the criteria....
When 20/30 candidates are sitting for campus selection, definitely first few rounds(atleast 2) will be written...
then comes face to face interview.....
So all the beautiful girls, would have been filtered in the early rounds, if they are unfit.
If someone has 100% marks and cannot communciate, as expcted whats the point in selecting that person...
For that, we can take a candidate with 85% marks and better communication...
We can always train the freshers....
Thats it for now, will come back later...
Sorry for the peter....no Tamil typing... :-)
BTW, I also studied in Tricy(SRC) and A.M.C combo.
Good to know you and your blog.
கடைசி அனானி அவர்களே,
நீங்கள் சரியான பல விபரங்களை கொடுத்துள்ளீர்கள்...
//In Campus, as far as i've seen...(have personally conducted so many interviews...)
12/ MCA/ BE marks are just one of the criteria....
When 20/30 candidates are sitting for campus selection, definitely first few rounds(atleast 2) will be written...
then comes face to face interview.....
So all the beautiful girls, would have been filtered in the early rounds, if they are unfit.
//
நானெல்லாம் 12த் கணக்கில் நூழிலையில் தேர்ச்சி பெற்றேன்...கேம்பசை பொருத்த வரை நானும் கடைசி வரை கேம்பசில் தேர்வு பெற்றேன்...(அதனால் மதிப்பெண் அதிகமெடுக்காதவர்கள் தேர்வு பெறலாம் என்பது எத்தனை உண்மையோ, அது போல் தேர்வு பெற்றவர்கள் திறமைசாலியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதும் உண்மை...)
//
I think all companies will conduct so called technical/ analytical/ programmatic rounds of interviews.
Basically, you should be an expert in all...
//
கேம்பசை பொருத்த வரை செலக்சன் டெக்கினிக்கலாக இருக்காது மற்றும் 12த் கணக்கை மட்டுமே முன்னிருத்தியிருக்கும் என்பதை நான் தங்களுக்கு கூறத்தேவையில்லை... அந்த கணக்கு அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை... 12த் மதிப்பெண்கள் எந்த வகையிலும் டெக்னிக்கலாக உப்யோகப் படாது(டெக்னிக்கலாக திறமையாக இருக்கவேண்டும் என்று "freshers" சை யாரும் எதிர் பார்க்க மாட்டார்கள் என்பதும் தங்களுக்குத் தெரிந்திருக்கும்...),அப்படியே பார்த்தாலும் நானொன்றும் கடைசி வரை செலக்ட் ஆகாதவர்களையும், ஆனவர்களையும் ஒப்பிடவில்லை.. கடைசி வரை தேர்வு பெற்றவர்களை மட்டும் தான் கணக்கில் எடுத்தேன்...
நான் 12த்தில் அதிக மதிப்பெண் பெற்ற அழகானவர்களைத் தான் குறிப்பிட்டேன்.... முன் அனுபவம் பார்த்து தேர்வு செய்வதில் அழகை முன்னிருத்தி நான் எதுவும் எழுதவில்லை.. அப்படிப் பட்ட இடத்தில் தான் என்னைப் போன்ற டெக்னிக்கல் அறிவு உள்ளவர்கள் தகுதி பெருகிறார்கள், நானும் தகுதி பெற்றேன் என்பதே உண்மை...
//This is applicable for any candidate and not only for 'beautiful' candidates!!!!//
(ஆண்களில் தகுதியில்லாதவர்களைத் தேர்வு செய்து விடுவது அழகால் அல்ல அதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்...,ஆனால் பெண்கள் விசயத்தில் பெரும்பாலும் அழகால் தான் தேர்வுசெய்யப் படுகின்றனர்)
//Whats the point in creating an excellent module and dont know to explain that...
So communication in English is a MUST.
//
ஆங்கிலம், திரும்பவும் இது பிரச்சனை தான்.. எத்தனையோ நபர்கள் ஆங்கிலத்தில் தொடர்ந்து 2 வாக்கியம் கூட பேசத்தெறியாதவர்கள் மென் துறையில் அதிக அளவில் உள்ளனர்... திறமைக்கு முன் ஆங்கிலம் தேவையற்றது... அதை நான் எப்போதும் மருக்க மாட்டேன்...
நாமொன்றும் வெளிநாட்டு கிளயண்டிடமோ, நம் அலுவலகத்திலே பெரிய ஆட்களிடமோ சென்று நாம் செய்தததைக் கூறி, விவரிக்க போவதில்லை.. அதெற்கென பெரிய சம்பளத்தில் மக்கள் இருக்கின்றார்கள்... அதனால் நமக்கு கொடுத்த வேலையை முடித்து, ஒரு மின்னஜ்சல் அனுப்ப பெரிய ஆங்கில அறிவு ஒன்றும் தேவையில்லை..
//But i've seen project/module leaders rejecting under performing candidates....//
இதை நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்டேன் இங்கு
//என் வாதம் பெண்களைத் தாக்கியல்ல, புரிந்துகொள்ளுங்கள்... அதுவுமில்லாமல் அப்படி சேர்ந்த பெண்களை திரும்ப அனுப்பிய கதைகளும் உண்டு...//
//BTW, I also studied in Tricy(SRC) and A.M.C combo.
Good to know you and your blog. //
ஆகா அடைக்கலமாதா கல்லூரியா, வேரு எதாவதா..? அப்படியாக இருந்தால் நானும் கூட அங்கு தான் இளநிலை படித்தேன்
வள்ளி,
முதல் சுற்றுக்களில் தேர்வடைந்தவர்கள் என்றாலே கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் என்றுதான் பொருள். ஆகவே, அவர்களை வேலைக்குத் தகுதியானவர்கள் என்று நிறுவனத்தால் கருதப்படுபவர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதிச் சுற்றான நேர்முகத் தேர்வு பெரும்பாலும் போட்டியாளரின் soft skills என்று சொல்லப்படுகிற ஆளுமை (personality), பேச்சாற்றல், கடினமான கேள்விகளை எதிர்கொள்ளும் ஆற்றல் (objection handling), தன்னம்பிக்கை, பிறருடன் பழகும் விதம் (inter-personal skills) போன்றவற்றை பரிசீலிக்கும் சுற்றாகும். இதில் உங்களைப் போன்ற hard-skills (மட்டும்) அதிகம் உள்ளோர் சாதகமான முடிவைப் பெறாமல் போக வாய்ப்புள்ளது. அதனால்தான் soft-skillsஉம் முக்கியம் என்கிறார்கள். ஆங்கிலம் தேவையில்லை, கூடுதல் நேரம் உழைக்கத் தேவையில்லை என்று பல இறுக்கமான நிலைப்பாடுகளை நீங்கள் வைத்திருப்பதாக எனக்குப் படுகிறது. அவற்றைக் கொஞ்சம் தளர்த்தினாலேயே உங்களால் எதிர் தரப்பிலுள்ளவர்களை மேலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியலாம்.
மென்துறையில் பெண்கள் தங்கள் அழகை வைத்துக் கொண்டுதான் முன்னேறுகிறார்கள் என்ற பொய்ப்பிரச்சாரங்கள் ஒருவேளை பரப்பப்படுகின்றனவோ என்னவோ (நான் கேட்டதில்லை). அது உண்மைதான் என்று கூறுவது போலுள்ளன உங்கள் ('எனக்குக் கிடைக்காமல் திறமையற்ற அழகான பெண்களுக்கு நல்ல வேலைகள் கிடைத்தன' என்பது போன்ற) வாதங்கள்.
(அனானி குறிப்பிட்ட SRC - Trichy, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி என்று நினைக்கிறேன். என் தாயார் தனது முதுகலைக் கல்வியை அங்குதான் படித்தார்கள்.)
Voice on Wings - Thanks for your comments. You have explained further what i wanted to say.
Definitely, without soft skills, you cannot survive or no career growth in this industry.
I'm not sure what type of job you are into...if you are in consulting, IT support(i dont mean call center jobs here) work definitley you have to interact with customers directly...
Other than that, not necessarily big boss or clients, even if you have to communicate to your subordinate, you should have soft skills.
Without that, i cant complain that guys are not talking to me and they are talking only to good looking girls :-)
Also, i'm not sure abt campus interviews, you have attended.
To my knowledge, just 12th maths mark is compeletely insufficient...
Standard companies will test analytical skills, subject skills (like OS, DBMS, n/w) and soft skills.
All i'm trying to explain is, just dont be under an impression that beauty brings recognition...
How long are you going to write code and drop an email to onsite guy????
We should have overall talent...without which, you cannot survive.
Interpersonal skills, communicate skills is very very important in this industry...You cannot say i dont want to communicate and my manager will take care for me.
Dont you want to become manager oneday??
Yes, i did my UG in SRC (voice on wings is right) and PG in AMC.
I'm not sure whether you were in AMC, when i joined for PG.
I hardly remember any sports person of your name... :-) Moreover, sportskkum namakkum pala mile, so may be i'm unaware...
ஆகா.. நாம சொல்ல வந்தததையே புரிந்து கொள்ள மாட்டராங்களே..
உங்கள் தரப்பு வாதம் உண்மை தான்., நீங்கள் கூறி உள்ளதை நான் எங்கும் மருக்கவில்லை.. வேலைக்குத் தகுதியானவர்கள் என்று நிறுவனத்தால் கருதப்படுபவர்கள் மட்டும் தான் தகுதி பெருகிறார்கள் என்றால் ஏனப்பா அப்படி ஒரு "டாக்" இருக்கணும்.. அப்படி இருக்கும் பட்சத்தில் தான் நான் கூறுகின்றேன்...
அப்படி வேலைக்குத் தகுதியானவர்கள் என்று நிறுவனத்தால் கருதப்படுபவர்கள் ஏன் சில முறை அவர்களை திரும்ப அனுப்ப வேண்டும்..? அப்படியென்றால் அவர்கள் கண்ணோட்டம் சரியில்லை என்று தானே பொருள்... அப்படிப்பட்ட ஒன்றுக்குத் தான் என் பதிவு...
//'எனக்குக் கிடைக்காமல் திறமையற்ற அழகான பெண்களுக்கு நல்ல வேலைகள் கிடைத்தன' ...... இதில் உங்களைப் போன்ற hard-skills (மட்டும்) அதிகம் உள்ளோர் சாதகமான முடிவைப் பெறாமல் போக வாய்ப்புள்ளது//
இதிலெல்லாம் அர்த்தங்களில்லை, அந்த கம்பெனி இல்லாவிட்டாலும் வெரு கம்பெனியில் வேலை வாங்கினேன் தான்.. அப்படி ஒரு சூழலை நான் சந்தித்ததால் தான் இந்த பதிவே..அது ஒரு எடுத்துக் காட்டு..
//ஆங்கிலம் தேவையில்லை, கூடுதல் நேரம் உழைக்கத் தேவையில்லை என்று பல இறுக்கமான நிலைப்பாடுகளை நீங்கள் வைத்திருப்பதாக எனக்குப் படுகிறது.//
அப்படியெல்லாம் இல்லை.. தேவைப்பட்டால் நான் 12மணி வர கூட இருந்ததாய் நான் கூறியிருந்தேன்... அப்படியில்லாமல் ஆங்கிலம் தேவையில்லை என்று இன்றைய மென் துறையில் உள்ள யாரும் சொல்ல மாட்டார்கள்.. அது ஒரு பெரிய தகுதியல்ல "சர்வே" செய்ய முடியாத அளவு, என்று தான் சொன்னேன், பிறகு அலுவலகத்தில் சேர்ந்த பின் தானாக வரும்(புத்திசாலியாக இருக்கும் பட்சத்தில்)...
//
இறுதிச் சுற்றான நேர்முகத் தேர்வு பெரும்பாலும் போட்டியாளரின் soft skills என்று சொல்லப்படுகிற ஆளுமை (personality), பேச்சாற்றல், கடினமான கேள்விகளை எதிர்கொள்ளும் ஆற்றல் (objection handling), தன்னம்பிக்கை, பிறருடன் பழகும் விதம் (inter-personal skills) போன்றவற்றை பரிசீலிக்கும் சுற்றாகும்.
//
அதெல்லாம் இருந்தாலும் கோட் எழுதவில்லையென்றால் துறத்தி விடுவார்கள்.. அதனால் தான் அந்த "டாக்.."
//மென்துறையில் பெண்கள் தங்கள் அழகை வைத்துக் கொண்டுதான் முன்னேறுகிறார்கள் என்ற பொய்ப்பிரச்சாரங்கள் ஒருவேளை பரப்பப்படுகின்றனவோ என்னவோ (நான் கேட்டதில்லை). அது உண்மைதான் என்று கூறுவது போலுள்ளன உங்கள் ('எனக்குக் கிடைக்காமல் திறமையற்ற அழகான பெண்களுக்கு நல்ல வேலைகள் கிடைத்தன' என்பது போன்ற) வாதங்கள்.
//
அப்படிப்பட்ட வாதங்களுக்கான என் பதில் தான் அது..! இது பொதுவாக நடப்பது தான்.. அதை ஒப்புக் கொள்ளாததும், கொள்ளுவதும் அவரவர் கண்ணோட்டம்... நீங்கள் கேட்டதில்லை என்பதால் மட்டும் "ஒன்று" இல்லாமல் போய்விடாது...
அனானி,
அது போல் இரண்டாம் அனானி, உங்களின் ஒரு வாதம் என்னைப் பொருத்த வரை அர்த்தமற்றது.. நான் கூறியது செலக்ட்டிங் கமிசனில் உள்ள ஆண்களை..
"அழகைப் பார்த்து மட்டும் தான் வேலைத் தருகிறார்கள்", என்று நான் எழுதியிருப்பதைப் போல் நினைத்துக் கொண்டு பின்னூட்டம் இட வேண்டாம்... பெண்கள் விசயத்தில்(ஆண்கள் விசயத்தில் அல்ல) பெரும்பாலும் தகுதியில்லாதவர்களைத் தேர்ந்தெடுக்கும் காரணியாக அழகு உள்ளது என்பது தான்(மட்டும்) என் முக்கிய வாதம்.
அது ஒப்புக்கு சப்பாணி வள்ளி.
நான் கணிணிணித் துறையில் புரோகிராமராகத் தான் உள்ளேன்
//Without that, i cant complain that guys are not talking to me and they are talking only to good looking girls :-)//
நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை, பொதுவாக பெண்களிடம் பேசத் தங்குவார்கள் என்று தான் கூறினேன்...freshers தவிர்த்து எங்கும் நான் அழகை ஒரு காரணமாகக் கூறவில்லை..
//To my knowledge, just 12th maths mark is compeletely insufficient...
Standard companies will test analytical skills, subject skills (like OS, DBMS, n/w) and soft skills.//
அப்படியெல்லாம் இல்லை, TCS, CTS, Wipro, Satyam,infosys எவரும் இதையெல்லாம் கேட்டதாகத் தெரியவில்லை...
//Other than that, not necessarily big boss or clients, even if you have to communicate to your subordinate, you should have soft skills.//
subordinate டிடம் பேசக் கூடத் தெரியாதவர்கள் கணிணியில் வேலை வாங்க முடியாது, என்றாலும் அப்படிப் பட்ட பலரை எனக்குத் தெரியும் (ஆண், பெண் இருவரும்....), அவர்கள் வெளி நாடு செல்லவோ, பெரிய நிலைக்கோ வர முடியாவிட்டாலும், கோடிங் திறமையால் நிறைய சம்பளத்தில் வேலையில் உள்ளார்கள்,....
//All i'm trying to explain is, just dont be under an impression that beauty brings recognition...//
பலர் ஒப்புக் கொண்ட ஒரு விசயம் இது.. என்னுடன் பணி செய்பவர்களைக் கேட்ட போது, தனிப்பட்ட முறையில் அழகு பார்க்காவிட்டாலும், பல முறை பொதுவில் அதற்கு இடம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டனர்...அழகு பார்த்து வேலை தருகிறார்கள் என்ற கருத்தைக் கூட நான் பல முறை மறுப்பேன் ஆனால் அழகிற்கு நிச்சயம் recognition உள்ளது.அதற்காக அழகில்லாதவர்களுக்கு recognition இல்லை என்று கூற வரவில்லை... திறமை மூலம் கடினப் பட்டு தான் கொண்டுவரமுடியும்
//Dont you want to become manager oneday??//
அதற்கு நாம் நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும்... அங்கெல்லாம் அழகு எடுபடாது என்பதும் தெரியும்...
//last anony
நான் எழுத்துப் பிழய் செய்வதில் மன்னி... மன்னியுங்கள்...
another karpanai post...
am i reading varamalar or what? to read the author's little incident and exaggerating to the highest level
First impression is the best impression! (in a face to face setting). And an employer decides favourably (or not) in the first 2 minutes of meeting the person. So attractive looking person (please not it applies to both the male and female gender!) do get a better start in interview setting, but to keep growing in the organisation, one needs a lot more other than being able to look smart.
//So attractive looking person (please not it applies to both the male and female gender!) do get a better start in interview setting, but to keep growing in the organisation, one needs a lot more other than being able to look smart.
//
ரவி கூறியது போல், என் எழுத்துக்களில் புரிந்து கொள்ள முடியாத அளவு பிழை இருக்கிறது என்று நினைக்கின்றேன்....! இப்போதைக்கு கடைசி அனானி அவர்களே இதைத் தான் நானும் கூறினேன்.. பெண்களை சும்மா கிண்டல் பண்ணாதீர்கள் என்று தான் கூறினேன்.. என்ன நீங்கள் ஆங்கிலத்தில் எழுதி உள்ளீர்கள், நான் தமிழில் எழுதி உள்ளேன்.. ஆண்களை அப்படி எவரும் கூருவதில்லை... பெண்ணளை மாத்திரம் தான் அப்படி கூறுகிறார்கள்....
இன்னொரு அனானி அவர்களே,
//am i reading varamalar or what? to read the author's little incident and exaggerating to the highest level
//
பிளாகில் எந்த தரத்திற்கு (வாரமலர் தரத்திற்கும்)வேண்டுமானாலும் எழுதலாம், தாங்கள், நல்ல தரம் வேண்டுமானால், நீங்கள் நம்பும், தகுதியுள்ளவர் புத்தகங்களையோ, பதிவுகளையோ படித்துகொள்ளளாம்... என்னைப் பொருத்த வரை இது பரவலாக எல்லா இடங்களிலும் உள்ள ஒரு "டாக்" தான்...
ரவி கூறியது போல், என் எழுத்துக்களில் புரிந்து கொள்ள முடியாத அளவு பிழை இருக்கிறது என்று நினைக்கின்றேன்....! இப்போதைக்கு கடைசி அனானி அவர்களே இதைத் தான் நானும் கூறினேன்.. பெண்களை சும்மா கிண்டல் பண்ணாதீர்கள் என்று தான் கூறினேன்.. என்ன நீங்கள் ஆங்கிலத்தில் எழுதி உள்ளீர்கள், நான் தமிழில் எழுதி உள்ளேன்.. ஆண்களை அப்படி எவரும் கூருவதில்லை... பெண்ணளை மாத்திரம் தான் அப்படி கூறுகிறார்கள்....
இன்னொரு அனானி அவர்களே,
பிளாகில் எந்த தரத்திற்கு(வாரமலர் தரத்திற்கும்) வேண்டுமானாலும் எழுதலாம், தாங்கள், நல்ல தரம் வேண்டுமானால், நீங்கள் நம்பும், தகுதியுள்ளவர் புத்தகங்களையோ, பதிவுகளையோ படித்துகொள்ளளாம்... என்னைப் பொருத்த வரை இது பரவலாக எல்லா இடங்களிலும் உள்ள ஒரு "டாக்" தான்...
//பெரும்பாலான இடங்களில் திறமையை விட அழகும், ஆங்கிலமும், பந்தாவுமே எடுபடுகின்றன.. மனிதர்களுக்கு மற்றவர்களை கவனிக்கும் திறன் அல்லது கலை பொதுவாக குறைந்து வருகிறது.// இந்த கருத்து மற்ற துறைக்கு வேணும்னா பொருந்துமே தவிர மென் பொருளுக்கு அல்ல. VOW சொன்னது 100% சரியென்றாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை உங்கள் சொந்த அனுபவத்தை வைத்துன்னு புரியுது. நீங்க சொன்னா மாதிரி அழகின் அடிப்படையில் வேலையேறியவர்கள் எத்தனை நாளுக்கு வேலை தெரியாமல் தாக்குப்பிடிக்க முடியுமென நினைக்கிறீர்கள்?
/* ஜெஸிலா said...
//பெரும்பாலான இடங்களில் திறமையை விட அழகும், ஆங்கிலமும், பந்தாவுமே எடுபடுகின்றன.. மனிதர்களுக்கு மற்றவர்களை கவனிக்கும் திறன் அல்லது கலை பொதுவாக குறைந்து வருகிறது.// இந்த கருத்து மற்ற துறைக்கு வேணும்னா பொருந்துமே தவிர மென் பொருளுக்கு அல்ல. */
ஜெஸிலா பின்னூட்டத்திற்கு நன்றி... நீங்கள் கூறியுள்ள கருத்து முரண்பாடாக உள்ளது, "மற்ற துறையில் வேண்டுமானால் பொருந்துமே தவிர மென் பொருளுக்கு அல்ல." என்பது தான்... நீங்கள் திறமையில்லையென்றால் இருக்க முடியாது என்பதற்காக கூறியுள்ளீர்கள், அதை நான் என் பதிவிலேயே ஒப்புக் கொண்டேன், என் பின்னூட்டங்களிலும் கூறியிருந்தேன்...
மற்ற துறைக்கு வேண்டுமானால் பரவாயில்லை என்றால், மென் துறையில் மட்டும் கணிணிகளா வந்து தேர்வு செய்கின்றன.. எங்கும் மனிதர்கள் தானே....மற்ற துறைகளிலும் தான் நேர்முகத் தேர்வுக்குப் முன் பல கட்டங்கள் உள்ளன...
நீங்கள் ஒன்று அந்த கருத்தையே மருத்திருக்க வேண்டும், அல்லது சர்வே செய்ய முடியாது என்று கூறியிருக்க வேண்டும், அப்படி செய்யாதது நீங்கள் கணிணித் துறையில் உள்ளீர்கள் என்பதை மட்டுமே எனக்கு உணர்த்தியது... மற்றும் அனைத்து கருத்திற்கும் நான் ஏற்கனவே பதில் கொடுத்து விட்டேன்..
:))
எங்களுடைய பழைய ப்ராஜக்டிலும் புதிதாக ஆள் சேர்க்க வேண்டுமென்று கூறியவுடன் முதலில் ஆண்களே கிடைப்பார்களா என்றுதான் பார்த்தார்கள் எங்களுடைய 'பெண்' மேலாளர். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முதன்மையாக நான் நினைப்பது ஆண்களின் சமூக சுதந்திர நிலை. நீங்கள் கூறியதுபோல் இரவு எவ்வளவு நேரமானாலும் ஆண்கள் போல் 'எல்லா' பெண்களும் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. அதுபோல் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும்பொழுது, பெரும்பானமையான 'திருமணமான' பெண்கள் மறுத்து விடுகின்றனர். காரணம் குடும்பம் மற்றும் சமூக சூழ்நிலை.
அதுவுமில்லாமல் பெரும்பான்மையான 'Freaking out' பெண்கள் ப்ராஜக்ட் மோசமான நிலையாக இருந்தாலும், அதனை கண்டு கொள்ளாமல் வேலையை அப்படியே விட்டுவிட்டு போவதுண்டு. ஆண்களிலும் இத்தகைய மக்கள் இருக்கிறார்கள். ஆனால் 'விழுக்காடு' பார்க்கும்போது பெண்களுக்கு ப்ராஜக்ட் மேல் ஒரு பொறுப்பு வருவதில்லை.
இந்த வாக்கியங்களைப் பொதுப்படையாகக் கொள்ள வேண்டாம். அடைமொழியிட்ட வார்த்தைகளை மட்டும் பார்க்கவும் :)) (எது போடுறதா இருந்தாலும் ஒரு டிஸ்கி போட வேண்டியதா இருக்கு :))
வள்ளி நான் உங்களின் பெரும்பான்மையான கருத்துக்களுடன் ஒத்து போகிறேன்.உங்கள் பதிவிற்கு என்னுடைய கருத்துக்களை ஒரு பதிவாகவே வெளியிட்டிருக்கிறேன்.அவசியம் படித்து உங்கள் கருத்துகளை கூற வேண்டும்.
வள்ளி,ஒரு அவசியமான பதிவை போட்டிருக்கிறீர்கள். பின்னூட்டம் எழுதியுள்ள பலரும் நீங்கள் சொல்லவந்ததை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அழகிய பெண்களுக்கு சுலபமாக வாய்ப்புகள் கிடைக்கின்றன என நீங்கள் சொல்லவந்ததை ஏற்கத்தான் வேண்டும். சில கம்பெனிகள் அழகான பெண்களைத்தான் கேம்பசில் தேர்ந்தெடுப்பார்கள் என்று நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. சர்வீசஸ் கம்பெனிகள் தொழில் நுட்பத் திறமைகளைவிட கம்யூனிகேசன் திறமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்திருக்கலாம்;அதை நாம் அழகான பெண்களைத் தேர்ந்தெடுத்ததாக தவறாக நினைத்திருக்கலாம். நாங்கள் கூட இண்டர்வியூ எடுக்கும்போது நல்ல ஃபிகரா வந்தா செலக்ட் பண்ணிரலாம் என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் அப்படி செய்யமாட்டோம்;ஏனெனில் பின்னால் எங்களுக்குதான் தலைவலி வரும் என்று தெரியும்.
பெண்களிடம் டெக்னிகல் அறிவை பயன்படுத்த ஆண்கள் முன்வருவதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏங்க வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறீர்கள்? கணினிப் பொறியியல்தான் படித்தேன். முதல் மதிப்பெண் பெரும் பெண்கள்கூட மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கத்தான் நினைத்தார்களே ஒழிய புரொக்ராமிங்கில் ஆர்வம் காட்டவில்லை. நானாக லேபில் சில புரொக்ராம்களை விளக்கிச்சொன்னபோதும்(இத்தனைக்கும் அவர்கள் அழகான பெண்களுமில்லை) சக மாணவிகள் ‘செம போரடிக்கிறானே! சரியான மொக்கை!’ என்று நெளிந்தார்கள். இன்றும் என் நண்பர்கள் இதைச் சொல்லி எண்ணைக் கலாய்ப்பார்கள். இவ்வளவு பட்டும் அலுவலகத்தில் பெண்களிடத்தில் டெக்னிகலாக பேசி ’பழம்’ பட்டம் பெற எங்களுக்கு என்ன தலையெழுத்தா. கம்யூட்டர் லேபில் பவர் பாயிண்டில் கிராபிக்ஷ் 10 நிமிடம் காட்டிவிட்டு 1 மணி நேரம் கடலைபோடும் மைனர்களைத்தானே பெரும்பாலான மாணவிகளுக்குப் பிடித்திருக்கிறது?
Post a Comment